இந்தியா

காஷ்மீரின் உதம்பூா் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

Published On 2022-06-10 08:17 IST   |   Update On 2022-06-10 08:17:00 IST
  • காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது.
  • தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டம் நுக்ல்டா கிராமத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது. இதனால் பல மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா, அல்லது ஏதேனும் சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News