இந்தியா

பீகாரில் பேருந்தில் வைத்து வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது

Published On 2025-08-09 08:26 IST   |   Update On 2025-08-09 08:26:00 IST
  • பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.
  • பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பேருந்தில் நேபாள பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேபாளி மொழி பேசி, அவரது நம்பிக்கையைப் பெற்ற பேருந்து ஓட்டுநரான முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் , அவரது உதவியற்ற தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தக் கொடுமையைச் செய்தார்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளி கார்த்திக் ராய் மற்றும் அவரது கூட்டாளி சுனில் குமார் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் ராய் மேற்கு வங்கத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் பரானி அருகே ஒரு ரெயிலில் கைது செய்யப்பட்டார். கார்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது கூட்டாளி சுனில் குமார் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்டார்.

முசாபர்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான கார்த்திக் ராய் ஆகஸ்ட் 4 ஆம் தேதி, நேபாளத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் பேரில் பணம் சம்பாதிக்க வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் சந்தித்தார்.

வேலை தருவதாக உறுதியளித்து சுனில் குமாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு, அப்பெண்ணை பேருந்தில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்தார்.

பாதிக்கப்பட்ட பெண் காந்தி மைதானம் அருகே அழுதுகொண்டிருப்பதைக்  உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் கூர்க்கா ரெஜிமென்ட் வீரர்கள் கவனித்தனர். அவர்கள் கூர்க்கா சமாஜ் சமிதி தலைவர் சூரஜ் தாபாவிடம் தகவல் தெரிவித்தனர. அவர் பாதிக்கப்பட்டவரை காவல்துறையை அணுகி புகார் அளிக்க உதவினார்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News