இந்தியா

படிக்கச் சொன்ன தந்தை.. Shopping Mall 4வது மாடியில் இருந்து குதித்து 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

Published On 2025-04-07 08:16 IST   |   Update On 2025-04-07 08:16:00 IST
  • தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார்.
  • "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

பஞ்சாபில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றின் 4 ஆவது மாடியில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாகத் தெரிவித்தனர்.

ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

 அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த அன்று காலை, தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார். இது ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

பின்னர் அபிஜித் விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

Tags:    

Similar News