இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஆகஸ்ட் 15 முதல் Fastag கட்டாயம்..! தேவஸ்தானம் அறிவிப்பு

Published On 2025-08-12 18:07 IST   |   Update On 2025-08-12 18:15:00 IST
  • ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம்.
  • ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் .

ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு Fastag கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ICICI வங்கியுடன் இணைந்து அலிபிரி மலைப்பாதையில் Fastag வழங்கும் மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

திருப்பதி அலிபிரி மாலைப்பாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2022ஆம் ஆண்டு Fasttag முறையை அறிமுகம் செய்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), பாதுகாப்பை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்யவும் Fastag-ஐ கட்டாயமாக்கியுள்ளது.

Tags:    

Similar News