இந்தியா

ஆங்கிலம் அதிகாரமளிப்பது ; வெட்கக்கேடானது அல்ல- அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி

Published On 2025-06-20 15:19 IST   |   Update On 2025-06-20 16:40:00 IST
  • இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பிஜேபி- ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
  • ஏனென்றால, கேள்வி கேட்பது, முன்னோக்கிச் செல்வது, சமநிலை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்யுடு பேசினார். அப்போது "இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தைகய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய மொழிகளில் இல்லையென்றால், நாம் உண்மையான இந்தியனாக இல்லாமல் போய்விடுவோம்.

நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ஆங்கிலம் அதிகாரமளிப்பது. வெட்கக்கேடானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பிஜேபி- ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால, கேள்வி கேட்பது, முன்னோக்கிச் செல்வது, சமநிலை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆங்கிலம் அணை கிடையாது. அது ஒரு பாலம். ஆங்கிலம் அவமானது அல்ல. அது அதிகாரமளிப்பது. ஆங்கிலம் சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவி.

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாசாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடுவதற்கான பாதை அதுதான். .ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்பை வழங்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News