இந்தியா

ஆபீஸ் மீட்டிங் இடையே எழுந்து சென்று அலுவலக கட்டடத்தில் இருந்து குதித்து இன்ஜினீயர் தற்கொலை

Published On 2025-07-29 04:00 IST   |   Update On 2025-07-29 04:01:00 IST
  • அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.
  • தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் ஹிஞ்சேவாடி ஐடி ஹப்பில் உள்ள அட்லஸ் காப்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் 23 வயதான பியூஷ் அசோக் காவ்டே.

இவர் நேற்று காலை 9:30 மணியளவில் ஆபீஸ் மீட்டிங் கூட்டத்தின் நடுவே வெளியேறி, தான் வேலை செய்யும் கட்டிடத்தின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு, பியூஷ் தனது குடும்பத்திற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். தற்கொலைக் கடிதத்தில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பது முழுமையாக விசாரிக்கப்படும் என்று புனே காவல்துறையின் உதவி ஆணையர் சுனில் குராடே தெரிவித்தார்.

அவர் மீது பணி அழுத்தம் இருந்ததா என்று கேட்டபோது, "முதல் பார்வையில் அப்படி எதுவும் தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது" என்று சுனில் தெரிவித்தார்.

இது குறித்து தற்செயலான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News