இந்தியா

அனில் அம்பானிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ED ரெய்டு

Published On 2025-07-24 12:56 IST   |   Update On 2025-07-24 12:56:00 IST
  • அனில் அம்பானிக்கு சொந்தமான 50 நிறுவனங்களில் ED சோதனை நடத்தப்பட்டு வருகிறது
  • அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி கடன் வழங்கி இருந்தது.

பணமோசடி வழக்கில் டெல்லி, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என SBI அறிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

அணில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் உள்ள 50 நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருந்தது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ற புகாரில் ED சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News