இந்தியா

பதிவு செய்யப்பட்ட 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் ஆணையம்: இதுதான் காரணம்

Published On 2025-08-10 03:43 IST   |   Update On 2025-08-10 04:32:00 IST
  • பதிவு செய்யப்பட்ட 334 அரசியல் கட்சிகளை நீக்கியது தேர்தல் ஆணையம்.
  • இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.

புதுடெல்லி:

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் இருக்கவில்லை. பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854 ஆக இருந்த நிலையில், அவற்றில் தற்போது 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் இந்த எண்ணிக்கை 2,520 ஆக குறைந்துள்ளது.

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன என தெரிவித்துள்ளது,

Tags:    

Similar News