இந்தியா

ஸ்கூல் கெமிஸ்ட்ரி லேபில் ஜோராக நடந்த போதைப் பொருள் உற்பத்தி - நிர்வாகி கைது

Published On 2025-09-14 19:20 IST   |   Update On 2025-09-14 19:20:00 IST
  • கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
  • வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது. 

கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.

வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

Similar News