வக்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடினால் அரசியல் சாயம் பூசக்கூடாது- உமர் அப்துல்லா
- மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.
வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-
எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.
இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.