இந்தியா

விமான விபத்துகளில் தனி ஒருவராக உயிர் பிழைத்த அதிசய மனிதர்கள் பற்றி தெரியுமா?.. ஷாக் தொகுப்பு!

Published On 2025-06-14 10:24 IST   |   Update On 2025-06-14 10:24:00 IST
  • எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த அவர், விமானம் விபத்துக்குள்ளாகும் குதித்து தப்பியுள்ளார்.
  • இருக்கை பெல்ட்டுடன் 10,000 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்து, 11 நாட்கள் காட்டில் தவித்துப் பின்னர் மீட்கப்பட்டார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் (AI-171), விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். அதிசயமாக ரமேஷ் விஸ்வஸ்குமார்(40 வயது) என்ற ஒரே ஒருவர் உயிர்பிழைத்தார்.

அவர், விமானத்தின் எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த அவர், விமானம் விபத்துக்குள்ளாகும்  குதித்து தப்பியுள்ளார். விபத்துக்குப் பிறகு, அவர் காயங்களுடன் தள்ளாடி ஆம்புலன்ஸ் நோக்கிச் செல்லும் காட்சிகள் வெளியானது.

 இப்படி விபத்தில் ஒரே ஒருவர் அதிசயமாக உயிர்பிழைப்பது இது முதல் முறை அல்ல.

விமான விபத்துக்களில் தனி நபராக உயிர் பிழைத்தவர்களின் பல அதிசயக் கதைகள் இதற்கு முன் நடந்துள்ளன.  

ஜூலியான் கோப்கே (டிசம்பர் 1971): 17 வயதான இவர், அமேசான் மழைக்காட்டில் விழுந்த LANSA விமானம் 508 விபத்தில், இருக்கை பெல்ட்டுடன் 10,000 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்து, 11 நாட்கள் காட்டில் தவித்துப் பின்னர் மீட்கப்பட்டார்.

வெஸ்னா வுலோவிக் (ஜனவரி 1972): விமானப் பணிப்பெண்ணான இவர், காற்றில் வெடித்த JAT யுகோஸ்லாவ் ஏர்லைன்ஸ் விமானம் 367 விபத்தில், பாராசூட் இல்லாமல் 10,160 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் பிழைத்து கின்னஸ் சாதனை படைத்தார். தலையில் காயம் மற்றும் கீழ் உடல் முடக்கம் ஏற்பட்டாலும், பின்னர் முழுமையாக குணமடைந்தார்.

ஜார்ஜ் லாம்சன் ஜூனியர் (ஜனவரி 1985): ரெனோவில் Galaxy Airlines Flight 203 விபத்துக்குள்ளாகி 70 பேர் இறந்த நிலையில், 17 வயதான ஜார்ஜ் மட்டுமே உயிர் பிழைத்தார்.

செசிலியா சிச்சான் (ஆகஸ்ட் 1987): 4 வயதே ஆன இந்த சிறுமி, Northwest Airlines Flight 255 விபத்தில் பெற்றோர்கள் மற்றும் சகோதரருடன் 156 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார்.

ஜிம் போலின்கே (ஆகஸ்ட் 2006): Comair Flight 5191 விபத்தில் 49 பேர் இறந்த நிலையில், இவர் மட்டுமே உயிர் பிழைத்த துணை விமானி ஆவார்.

பாஹியா பகோரி (ஜூன் 2009): யேமனில் இருந்து கொமோரோஸ் நோக்கிச் சென்ற Yemenia Flight 626 இந்தியப் பெருங்கடலில் விழுந்த விபத்தில், 152 பேரில் பிரான்சைச் சேர்ந்த 12 வயது சிறுமியான இவர் மட்டுமே 9 மணி நேரம் கடலில் தத்தளித்து மீட்கப்பட்டார்.

ரூபன் வான் அசோ (மே 2010): டிரிப்போலியில் வெடித்துச் சிதறிய விமான விபத்தில், நெதர்லாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரூபன் மட்டுமே உயிர் பிழைத்தான். அவனது பெற்றோர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். 

Tags:    

Similar News