null
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரரின் வீடு இடிப்பு - உ.பி. பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
- பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது.
- பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை
உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்திற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் ஹாக்கி வீரரின் வீடு இடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
1980 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி இந்திய அணியில் விளையாடிய வீர்ர் முகமது ஷாஹித். இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 இல் அவர் உயிரிழநதார்.
ஷாஹித்தின் மூதாதையர் வீடு கராச்சி-சந்தாஹா சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை புல்டோசர்கள் மூலம் இடித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது , அது வெறும் வீடு மட்டுமல்ல, நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்திற்கு ஒரு சான்று என்றும் பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆசாத் சமாஜ் கட்சித் தலைவரும் எம்பியுமான சந்திரசேகர் ஆசாத், பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை என்றும் விமர்சித்தார்.