இந்தியா

கோவாவில் சுற்றுலா பயணிகள் மீது வாள் மற்றும் கத்தியால் கொடூர தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2023-03-13 11:52 GMT   |   Update On 2023-03-13 11:52 GMT
  • குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர்.
  • பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக சென்றபோது அங்குள்ள ஊழியருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சுற்றுலா வந்த டெல்லி குடும்பத்தினரை சரமாரியாக தாக்கி உள்ளனர். வாள் மற்றும் கத்திகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை அடையாளம் கண்டு கைது செயதுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே குற்றவாளிகள் மீது போலீசார் மென்மையான போக்கை கையாண்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதல் வழக்கு வேறு ஒரு அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரிசார்ட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் சகித்துக்கொள்ளமுடியாதது என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Tags:    

Similar News