VIDEO: திடீர் மரியாதையால் நெகிழ்ந்த உழைப்பாளி!
- புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.
ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்பவர்கள் நேரமும், சூழலும் பாராமல் வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் பொருட்களை ஒப்படைக்க போராடுவார்கள். அதை பலரும் உணர்ந்து கொள்ளாமல் டெலிவரிபாய் என்று ஏளனமாக நினைப்பார்கள், அல்லது டிப்ஸ் எதிர்பார்ப்பார்கள் என்று சில்லறைகளை கொடுத்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களும் மனிதர்கள், உழைப்பாளிகள் என்று நட்புடன் கொடுக்கப்படும் மரியாதை அவர்களை நெகிழச் செய்கிறது. அதுபோன்ற நிகழ்வு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த நபர் டெலிவரி செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டெலிவரி ஊழியரையும் சேர்த்துக் கொண்டனர்.
முதலில் கூச்சப்பட்டு தயங்கிய அந்த நபரை, ஒருவர் ஓடி வந்து தூக்கி நட்புடன் செயல்பட ஆரம்பித்ததும், அந்த நபரும் சந்தோஷமாக அவர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.