இந்தியா
VIDEO: டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர் - இணையத்தில் கடும் விமர்சனம்
- டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை
டெல்லி மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்தை வழங்குவதில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களிடையே பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவு கூட இல்லை என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.