இந்தியா

டெல்லி: ஹுமாயுன் கல்லறை வளாக கூரை இடிந்து விபத்து - உள்ளே சிக்கிய 8 பேர் - மீட்புப் பணி தீவிரம்

Published On 2025-08-15 20:54 IST   |   Update On 2025-08-15 20:54:00 IST
  • மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
  • இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள இந்த கல்லறைக்கு பார்வையாளர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் கூரையின் பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து டெல்லி தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளுக்குள் 8 முதல் 9 பேர் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விபத்துக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

முகலாயப் பேரரசர் ஹுமாயூனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி ஹுமிதா பானு பேகத்தின் உத்தரவின் பேரில், 1562 ஆம் ஆண்டு இந்தக் கல்லறையின் கட்டுமானம் தொடங்கியது. இதைக் கட்ட எட்டு ஆண்டுகள் ஆனது.

இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News