டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
- இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA அறிவித்தது.
- மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பவம் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது.
அவருக்கு தாக்குதல் நடத்தப்பட்ட காரை வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.