இந்தியா
திருப்பதி கோவிலில் 6 மணி நேரத்தில் தரிசனம்
- கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் அதிகரித்து காணப்பட்டது.
- திருப்பதியில் நேற்று 66,312 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல் கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி முதல் நேரம் 9 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலையில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 66,312 பேர் தரிசனம் செய்தனர். 22,002 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.