இந்தியா

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Published On 2023-06-08 02:00 GMT   |   Update On 2023-06-08 02:00 GMT
  • அடுத்த 3 நாட்களில் புயல் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • புயல் பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புயல் இன்று அதி தீவிர புயலாக வலுவடைந்தது உள்ளது. காலை நிலவரப்படி, கோவாவில் இருந்து 870 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையிலும், மும்பையில் இருந்து 930 கிமீ தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது. அடுத்த 48 மணிநேரத்தில் புயல் படிப்படியாக மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

Similar News