இந்தியா

பெண் காவலரின் கழுத்தை நெரித்துக் கொன்ற CRPF வீரர்.. விபரீதத்தில் முடிந்த லிவ் இன் உறவு

Published On 2025-07-20 11:28 IST   |   Update On 2025-07-20 11:28:00 IST
  • CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
  • 2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஆக அருணா ஜாதவ் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில், வாக்குவாதத்தின் போது தனது லிவ்-இன் பார்ட்னரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

சனிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இடையே ஏதோ ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலீப் அருணாவை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் மறுநாள் காலை காவல்துறையில் சரணடைந்தார்.

2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி, அப்போது முதல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். 

Tags:    

Similar News