இந்தியா

அசாமில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் முயற்சி: கவுரவ் கோகாய் குற்றச்சாட்டு

Published On 2025-06-20 16:27 IST   |   Update On 2025-06-20 16:27:00 IST
  • தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம்.
  • வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம்.

பாஜக, ஆர்எஸ்எஸ், வி.ஹெச்.பி., பஜ்ரங் தளத்தில் உள்ள குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் அசாமில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.

மாட்டிறைச்சி, மற்றும் பசுக்களின் பாகங்களை பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு முன்னதாக வைப்பவர்களின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்து கொள்ள விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடையவர்களை கைது செய்ய வேணடும். முதன்முதலாக இந்த எண்ணம் தோன்றியவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோகாய் தெரிவித்துள்ளார்.

மேலும் கவுரவ் கோகாய் இது தொடர்பாக கூறியதாவது:-

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் வரவிருக்கின்றன. அவர்கள் தோல்வியை மறைக்க வேண்டும். இது அவர்களுடைய தந்திரம். தேர்தலுக்கு முன்னதாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் வி.ஹெச்.பி. உள்ள சில குற்ற மனப்பான்மை கொண்டவர்கள் தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற செயல்களை செய்ய முயற்சிப்பார்கள்.

இங்கு வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க யாரையும் அனுமதிக்க விடமாட்டோம் என்பதுதான் எங்களுடைய முக்கிய எண்ணம். பாஜக-வால், மணிப்பூர் மக்களின் நிலையை நாம் பார்க்கிறோம். அதை அசாமில் அனுமதிக்க விடமாட்டோம்.

அசாம் மாநில முதல்வர் அசோமியா ஜின்னா (Asomiya Jinnah) போல் செயல்படுகிறார். நாங்கள் ஜின்னா மாதிரியான அரசியலை அனுமதிக்கமாட்டோம்.

இவ்வாறு கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News