இந்தியா

பரவும் கொரோனா: அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்- கர்நாடக அரசு அறிவுறுத்தல்

Published On 2025-05-31 16:24 IST   |   Update On 2025-05-31 16:24:00 IST
  • காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
  • மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் நேற்று மாலை வரை 234 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் மற்ற இணை நோய்கள் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான சிகிச்சை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். உடல்நிலை சரியான பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறியுடன் வந்தால், அவர்களுக்கு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 26ஆம் தேதி கொரோனா தொற்று தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையாக ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News