இந்தியா

வேகமெடுக்கும் கொரோனா.. டெல்லியில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி.. கண்காணிப்பு தீவிரம்

Published On 2025-05-24 07:14 IST   |   Update On 2025-05-24 07:14:00 IST
  • படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகள் தயார்நிலையில் உள்ளன.
  • அகமதாபாத்தில் 20 பேர், அரியானாவில் 5 பேருக்கு தோற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 23 கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதனபடி அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் கூறுகையில், இதுவரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அகமதாபாத்தில் 20 பேர், அரியானாவில் 5 பேருக்கு தோற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 312 ஐ எட்டியுள்ளது.

Tags:    

Similar News