இந்தியா

ஜம்மு காஷ்மீர் டிஜிபி கொலை - வீட்டு வேலைக்காரர் கைது

Published On 2022-10-04 19:44 GMT   |   Update On 2022-10-04 19:44 GMT
  • ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • இக்கொலை தொடர்பாக அவரது வேலைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகர்:

1992-ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டிஜிபி லோஹியா, ஜம்மு நகரில், உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது வீட்டின் வேலைக்காரர் மாயமான நிலையில் போலீசார் தேடி வந்தனர்.

உள்துறை மந்திரி அமித் ஷா ஜம்மு - காஷ்மீர் வந்துள்ள நிலையில் சிறைத்துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லோஹியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலைக்காரர் யாசிர் அகமது (23), நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News