இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு காங்கிரஸ் வரவேற்பு

Published On 2023-09-19 01:05 IST   |   Update On 2023-09-19 01:07:00 IST
  • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
  • மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது,

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நடப்பு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மசோதா கொண்டுவரப் போவதை எதிர்பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News