இந்தியா

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ்

Published On 2023-10-09 19:19 IST   |   Update On 2023-10-09 19:21:00 IST
  • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது.
  • போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்த போரில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து உள்ளது. "இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி வலியுறுத்துகிறது," என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News