மணிப்பூர் வன்முறை: விசாரணை ஆணையம் அறிக்கையைச் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மூவர் குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹிமன்சு சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழு, விசாரணை துவங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மணிப்பூரில் வன்முறை தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகியும், அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய சூழலில், இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிக முக்கியமானது. இது வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துளு்ளது.
மேலும் அந்த அறிக்கை 20.05.2026-க்கு மிகாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்டட்டுள்ளது.