இந்தியா

சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால்... ஒரே நாடு ஒரு தேர்தல் குறித்து சசி தரூர் விமர்சனம்

Published On 2024-04-15 01:32 GMT   |   Update On 2024-04-15 01:32 GMT
  • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
  • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

"ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News