இந்தியா

'புஷ்பா 2' பாடலுக்கு மாணவிகளுடன் பேராசிரியை குத்தாட்டம்- வீடியோ

Published On 2024-12-24 07:33 IST   |   Update On 2024-12-24 07:33:00 IST
  • ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்.
  • வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல பரவி வருகிறது.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்து வரும் 'புஷ்பா 2' பாடலுக்கு மாணவிகள் கூட்டம் ஒன்று துள்ளலாக ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனிடையே அந்த பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை தலைவரான பார்வதி வேணு என்பவர் மாணவிகளின் நடனத்தை ரசித்து கொண்டிருந்தார். திடீரென அவர் தனது கையில் இருந்த பையை அருகே உள்ள நற்காலியில் வைத்துவிட்டு மாணவிகளுடன் சேர்ந்து நடனமாட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அந்த பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். பச்சை நிற சேலையில் மாணவிகளே ஆச்சரியப்படும் வகையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காட்டுத்தீப்போல பரவி வருகிறது.




Tags:    

Similar News