தலைமைத்துவம் மாற்றம்: காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் முடிவுதான் பைனல்- சித்தராமையா
- சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?.
- அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.
கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். இந்த மாதத்துடன் அவருடைய இரண்டரை கால முதல்வர் பதவி முடிவடைகிறது. அதன்பின் டி.கே. சிவக்குமார் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. ஆனால், காங்கிரஸ உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் முடிவுதான் பைனல் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
மக்கள் பேசலாம். ஆனால், உயர்மட்டம் யார்?. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லியார்ஜுன கார்கே இதுபற்றி பேசினார்களா?. மக்களை விட நீங்கள்தான் (செய்தியாளர்கள்) இது பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உயர்மட்ட தலைவர்கள் இது தொடர்பாக முடிவு செய்வார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து, மற்றவர்கள் பேசுவதற்கு மதிப்பு கிடையாது.
பெங்களூருவில் அதிகமான பீகார் மக்கள் உள்ளனர். அவர்கள் எங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.