இந்தியா

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா சந்திப்பு

Published On 2025-05-03 22:43 IST   |   Update On 2025-05-03 22:43:00 IST
  • காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
  • பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்.

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

அப்போது, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்திப்பது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News