ஒரு கையை தட்டினால் ஓசை வராது.. பாலியல் வன்கொடுமை வழக்கில் Influencer-க்கு உச்சநீதிமன்றம் ஜாமின்
- போதைப்பொருள் கலந்த இனிப்புகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 23 வயது Influencer-க்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
காவல்துறை அறிக்கைப்படி, 40 வயது பெண் தனது ஆடை பிராண்டை விளம்பரப்படுத்த சமூக ஊடக Influencer தேடும் போது, 2021 இல் அந்த இளைஞரை முதன்முதலில் தொடர்பு கொண்டார். அதன்பின் இருவரும் தொழில்ரீதியான தொடர்பில் இருந்தனர்.
இதற்கிடையே ஒரு பிராண்ட் படப்பிடிப்புக்காக இருவரும் சென்றுள்ளனர். பயணத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்புகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அவரது பணப்பையில் இருந்து பணத்தை திருடி, அவரது நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, படங்களை காட்டி அந்தப் பெண்ணை ஜம்முவுக்கு பயணிக்க அந்த இளைஞர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் இரண்டரை வருட காலமாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கடந்த 9 மாதமாக அவர் சிறையில் உள்ள நிலையில் அவரின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதன்பின் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் .வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், "ஒரு கையை தட்டினால் ஓசை வராது. எந்த அடிப்படையில் ஐபிசி பிரிவு 376 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தீர்கள்.
அந்த பெண் ஒன்றும் குழந்தை அல்ல. அந்தப் பெண்ணுக்கு 40 வயது. அவர்கள் இருவரும் ஜம்முவுக்கு ஒன்றாகச் சென்றுள்ளனர்.
ஏன் 376 ஐப் பயன்படுத்துகிறீர்கள். இந்தப் பெண் ஜம்முவுக்கு ஏழு முறை சென்றுள்ளார், கணவருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பதால், வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாததால், இடைக்கால ஜாமீன் வழங்க இது பொருத்தமான வழக்கு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
குற்றவாளியை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது, பெண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று பெஞ்ச் கூறியது.