இந்தியா

தலைமை நீதிபதி யு.யு.லலித்

37 ஆண்டுகள் மனநிறைவுடன் பயணித்தேன் - தலைமை நீதிபதி யு.யு.லலித்

Published On 2022-11-07 23:30 GMT   |   Update On 2022-11-07 23:30 GMT
  • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வு பெறுகிறார்.
  • சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார்.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறுகிறார். இதனையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பொறுப்பை, மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டிடம் ஒப்படைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தபோது அவருடைய தந்தையான சுப்ரீம் கோர்ட்டின் 16-வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் முதன்முதலில் முறையிட்டது நினைவுக்கு வருகிறது.

37 ஆண்டுகள் வாழ்க்கை பயணத்தை இந்த சுப்ரீம் கோர்ட்டில் கழித்துள்ளேன். எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் மூன்று அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வாகும். என்னால் இயன்றதை வக்கீல்களுக்கு செய்து உள்ளேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.

மாலையில் வக்கீல் சங்கங்கள் சார்பில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய யு.யு.லலித், எனது 74 நாட்கள் பதவிக்காலத்தில் 10 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். 6 அரசியல் சாசன அமர்வுகளை அமைத்துள்ளேன். எனது பணி மனநிறைவை தந்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News