இந்தியா
கேரள குண்டுவெடிப்பு சம்பவம்- முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு
- கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
- தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை வழங்கினார்.