இந்தியா

சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு ஜாமினில் விடுவிப்பு

Published On 2023-10-31 13:16 GMT   |   Update On 2023-10-31 13:16 GMT
  • ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
  • ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News