இந்தியா
9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி- அடுத்த ஆண்டு அறிமுகம்
- உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர்.
- 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும்.
புதுடெல்லி:
உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர். இந்நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள், இந்தியாவில் நடக்கின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. அதன் விலை ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.
இந்தநிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே 'செர்வாவேக்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் மலிவான விலையில் இது கிடைக்கும். 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.