இந்தியா

லடாக்கிற்கு PMGSY திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி ஒதுக்கீடு- மத்திய அரசு

Published On 2023-10-20 14:01 GMT   |   Update On 2023-10-20 14:01 GMT
  • நிதியை லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.
  • லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

2023-24 நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.36.65 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

யூனியர் பிரதேசம் நிர்வாகம் ரூ.36.65 கோடி நிதியை, அது கிடைத்த நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.

இந்த காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் வெளியீடுகளை நிறுத்த மத்திய அரசும் கட்டுப்படுத்தப்படலாம்.

ரூ.36,65,62,500 கார்பஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் யூனியன் பிரதேசத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள், மாவட்ட சாலைகள் மற்றும் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின், மூன்றாம் கட்டத்தின் கீழ், லடாக்கில் 500 கிமீ கிராமப்புற சாலை வலையமைப்பை அமைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News