இந்தியா
நெல் உள்பட 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பருப்புகளுக்கு 450 ரூபாய் உயர்த்தி வழங்க ஒப்புதல்.
- நிலக்கடலைக்கு 480 ரூபாய் உயர்த்தி வழங்க ஒப்புதல்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 2,363-ஆக நிர்ணயம் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நிதியாண்டைவிட குவிண்டாலுக்கு 69 ரூபாய் உயர்த்திவழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ராகி (குவிண்டாலுக்கு 596 ரூபாய்), காட்டன் (589 ரூபாய்), பருப்புகள் (450 ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு 480 ரூபாயும், சன்பிளவர் விதைக்கு 441 ரூபாய், சோயாபீன்ஸ்க்கு 436 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.