இந்தியா

மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ வழக்குப்பதிவு

Published On 2023-07-29 07:03 GMT   |   Update On 2023-07-29 07:03 GMT
  • ஆறு வழக்குகள் சிபிஐ, 3 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும்
  • வீடியோ வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தனது வேதனையை தெரிவித்ததோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டன.

நேற்றுமுன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் இதுகுறித்த வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு ஆறு வழக்குகளை சிபிஐ-யிடமும், மூன்று வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.

Tags:    

Similar News