இந்தியா
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்- வீடியோ வெளியீடு
- கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த போது பதிவான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதில், நேற்று மாலை சரியாக 7.02 மணிக்கு கார் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. கார் வெடித்ததும் மிகப்பெரிய அளவில் தீப்பிழம்பும் ஏற்பட்டுள்ளது.