இந்தியா

இந்திய பல்கலைக்கழகங்களில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரிப்பு - UGC

Published On 2026-01-20 05:12 IST   |   Update On 2026-01-20 05:12:00 IST
  • ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளது.
  • புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக UGC தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்று தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதிய பாகுபாடு தொடர்பான புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவான UGC தெரிவித்துள்ளது.

2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் UGC தாக்கல் செய்துள்ள தரவுகளில், 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 1,160 புகார்கள் பெறப்பட்டன. இதில் 1,052 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக UGC தெரிவித்துள்ளது.

குறிப்பாக 2019-20 கல்வி ஆண்டில் ஜாதி பாகுபாடு தொடர்பாக 173 புகார்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. ஆனால், 2023-24 கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக UGC தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்று டெல்லி பல்கலை. மற்றும் ஜே.என்.யு பல்கலை. பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.    

Tags:    

Similar News