இந்தியா

தெலுங்கானா சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது

Published On 2023-11-28 13:31 GMT   |   Update On 2023-11-28 13:33 GMT
  • இறுதி நாளான இன்று தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
  • நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

ஐதராபாத்:

5 மாநில தேர்தலில் கடைசி கட்டமாக தெலுங்கானாவில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக உழைத்து வருகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பிரசாரத்தின் இறுதி நாளான இன்று கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டினர்.

கரீம் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார்.

ஐதராபாத் அருகே நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓயந்தது.

நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Tags:    

Similar News