இந்தியா

தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம்.ஆக மாற்றிய ரேவந்த் ரெட்டி: கே.டி ராமராவ் குற்றச்சாட்டு

Published On 2025-05-23 16:35 IST   |   Update On 2025-05-23 16:35:00 IST
  • பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
  • முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்.

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம்.ஆக மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "தெலுங்கானாவின் நிர்வாகம் ஊழல் மற்றும் கமிஷன் ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது என்ற பிஆர்எஸ் குற்றச்சாட்டை தற்போது மத்திய அமைப்பான அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்" என்றார்.

தனியார் நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கும்படி கேட்டதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மறைந்த அகமது படேல், பவன் பன்சால் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்படவில்லை.

குற்றப்பத்திரிகையில் ரேவந்தின் பெயர் இருப்பதால் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுக்குமா அல்லது முந்தைய ஊழல்களைப் போலவே அவரைப் பாதுகாப்பார்களா? என்று ராம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News