இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் திடீரென மாயம்..

Published On 2025-08-01 11:52 IST   |   Update On 2025-08-01 11:52:00 IST
  • சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
  • பந்தசௌக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முகாமில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை (BSF) வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

தகவலின்படி, நேற்று (ஜூலை 31) இரவு, BSF வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.

BSF உடனடியாக சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால் அந்த அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தசௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அவரை தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News