"மிஸஸ் பீகார்" அழகிப் போட்டியில் பட்டம் வென்று அசத்திய பாஜக எம்எல்ஏ மனைவி
- இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது.
- விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
பாஜக எம்எல்ஏ விஷால் பிரசாந்தின் மனைவியும், முன்னாள் பீகார் எம்எல்ஏ சுனில் பாண்டேயின் மருமகளுமான ஐஸ்வர்யா ராஜ், 'மிஸஸ் பீகார் 2025' பட்டத்தை வென்றுள்ளார்.
"கனவுகள் நனவாகிவிட்டன - உங்கள் பெண் இப்போது மிஸஸ் பீகார் 2025!" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஐஸ்வர்யா ராஜ், தன்னை நம்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
"இந்த கிரீடம் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஐஸ்வர்யா ராஜ், மாடலிங் மற்றும் திரைப்படங்களில் ஆர்வம் இருந்தபோதிலும், திருமணத்திற்குப் பிறகு தனது கனவுகளை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது கணவரின் ஆதரவுடன் மீண்டும் களமிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிஸஸ் பீகார் 2025 போட்டியில் 21 முதல் 55 வயது வரையிலான பெண்கள் பங்கேற்கலாம். விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள் அல்லது குழந்தைகள் உள்ள, இல்லாத திருமணமான பெண்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
பீகார் பெண்களின் அழகு, புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர்வதே இப்போட்டியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.