இந்தியா
பீகாரில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை: காங்கிரஸ் அறிவிப்பு
- பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதில், பீகாரில் காங்கிரஸ் கட்சி அமைத்தால் பெண்களுக்கு 2500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.