பீகார் தேர்தல் தமாக்கா: முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.400-இல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிப்பு
- என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
- 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்
பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.
அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில் 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.