இந்தியா
பீகார் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் மர்ம மரணம்.. விடுதி அறையில் சடலமாக மீட்பு
- காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
- கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர் தனது விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஒடிசாவை சேர்ந்த யாதவேந்திர ஷாகு என்ற அந்த மாணவரின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, யாதவேந்திர ஷாகு படுக்கையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை, தற்கொலை உள்ளிட்ட கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.