இந்தியா

பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் சந்திப்பு

Published On 2022-09-14 13:43 GMT   |   Update On 2022-09-14 13:43 GMT
  • பூடான் மன்னர் லண்டன் செல்லும் வழியில் இந்தியா வந்துள்ளார்
  • வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவையும் பூடான் மன்னர் சந்தித்தார்.

புதுடெல்லி:

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவையும் பூடான் மன்னர் வாங்சுக் சந்தித்தார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பூடான் மன்னர், லண்டன் செல்லும் வழியில் இந்தியா வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நெருக்கமான மற்றும் தனித்துவமான இந்தியா-பூடான் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகள் பற்றி பூடான் மன்னருடன் விவாதித்ததாகவும், நட்புறவை மேம்படுத்துவதில் மன்னர் வழங்கிய யோசனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News