இந்தியா

ஆட்டோவின் பின்னால் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி - வைரல் வீடியோ

Published On 2025-08-20 07:31 IST   |   Update On 2025-08-20 07:31:00 IST
  • இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
  • தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தாரா மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியை ஆட்டோவில் 120 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. .

பாக்யஸ்ரீ ஜாதவ் என்ற பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தார். ஆனால் ஓட்டுநர் ஆட்டோவை நிற்காமல் வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஆட்டோவில் பின்னால் சிக்கி பெண் போலீஸ் அதிகாரி இழுத்து செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீஸ் அதிகாரியை மீட்டனர். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது காயமடைந்து பாக்யஸ்ரீ தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News